தமிழகத்தில் நாளுக்கு நாள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாணவர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தற்கொலை முடிவை தான் கையில் எடுக்கின்றனர். இதனால் மாணவர்களை மனரீதியாக தற்கொலை எண்ணத்தில் இருந்து வெளியே கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் மனநோய் பாதிப்புக்கான மருந்து உட்கொள்ளும் மாணவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களிடையே ஏதாவது அசாதாரண செயல்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பெற்றோருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.