Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்கள் பாதி பேருக்கு…. தமிழ் படிக்க தெரியவில்லை…. ஆய்வில் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் 3ஆம் வகுப்பு மாணவர்கள் பாதி பேருக்கு தமிழ் படிக்க தெரியவில்லை என்பது தேசிய கல்வி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தியது. 86,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழகத்தில் 336 பள்ளிகளை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் 2937 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் தமிழகத்தில் உள்ள மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாதி பேருக்கு தமிழ் சரியாக படிக்க தெரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

20% மாணவர்கள் மட்டுமே தமிழ் மொழியை சரியாக உச்சரிக்கின்றனர். 47% மாணவர்கள் ஆங்கில வார்த்தைகளை சரியாக படிக்கின்றனர். தமிழை ஊக்குவிக்க தமிழக அரசு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தமிழை சரியாக படிப்பது குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை.

Categories

Tech |