அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பின் மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதனால் இதனை தடுப்பதற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி 2022 – 23ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதில் திமுக அரசு ஏற்கனவே அறிவித்த வாக்குறுதிகள் பற்றிய நலத்திட்டங்களை அதற்காக நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றிருக்கின்றது. இதில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் 12,000 ரூபாய் வரை மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.
மேலும் இந்த திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான மாணவிகள் பயன் பெறுவார்கள். அதன்படி இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுபற்றி உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்திருக்கின்றது. அதில் தமிழகத்தில் வருகிற ஜூலை 15ஆம் தேதி அன்று காமராஜர் பிறந்த நாளை தமிழக அரசு கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்திருக்கின்றது. இந்த நாளை முன்னிட்டு மாணவிகளுக்கான ரூபாய் 1000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர்கல்வித்துறை தகவல் அளித்திருக்கிறது.
அதன்படி அடுத்த கல்வியாண்டில் சேரும் முதல் வருட கல்லூரி மாணவிகளுக்கு ஜூலை 15 முதல் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மேலும் உதவித்தொகை பெற விரும்பும் மாணவிகள் கட்டாயமான முறையில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.