சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ கூட்டத்திற்கு பிறகு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “மாணவி ஸ்ரீமதியை இழந்த வேதனையோடு இருக்கின்ற தாய்க்கு அரசு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்க வேண்டும். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் சந்தேகப்படுகிறார்.
அப்படி ஏதாவது சம்பவம் ஏற்பட்டு இருந்தால் பல்வேறு நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ அவர்களிடம் தெரிவித்து இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. மாணவிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை . அப்படிப்பட்ட சூழ்நிலை தமிழகத்தில் நிலவி வருகிறது. அரசாங்கம் செயலற்ற நிலையில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. உளவுத்துறை செயலற்று இருக்கிறது” என்று கூறினார்.