Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின்சார கட்டணம் சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள் கணக்கீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும்,100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி 1200 கோடியில் நடைபெற்று வருகிறது. பருவ மலைக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் மின்சாரம் கணக்கிடுவதை எளிமையாக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மீட்டர்கள் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

எனவே விரைவில் டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்த பிறகு தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் பீட்டர் பொருத்தப்பட்டு மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யும் பணி தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |