தமிழகத்தில் மாதம் இரண்டு நாட்களுக்கு தூய்மை முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த வருடங்களில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, அச்சத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்த சூழலிலும் தூய்மைப் பணியாளர்கள் தன்னலம் கருதாமல் வீதிகளை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர் . மேலும் அரசு ஒப்பந்த அடிப்படையில் கூடுதல் பணியாளர்களை பணி அமர்த்தியது. தற்போது திருச்சி மாவட்டத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் தூய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது, மக்கும் குப்பைகளை பச்சை நிறத்திலும், மக்காத குப்பைகளை நீலநிற தொட்டியிலும் பிரித்து போட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தீங்குவிளைவிக்கும் வீட்டு உபயோக குப்பைகளை மஞ்சள் நிற தொட்டியில் போட வேண்டும் என்று கூறப்பட்டது. அதனை தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுற்றுலாத்தலங்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள், சந்தைகள், உழவர் சந்தைகள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தூய்மை குறித்த விழிப்புணர்வை அரசு அலுவலர்கள் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். மேலும் நடந்த முடிந்த ஆலோசனைக்கு பிறகு எனது குப்பை எனது தூய்மை என்ற திட்டம் தொடங்கப்பட்டது.