தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகிறது. இதை எடுத்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் என அரசு அறிவித்துள்ளது.
அதாவது ஜூலை 10-ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில அவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால் அதற்கு தகுதியான மாணவிகள் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 2.2லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவிகள் தற்போது விண்ணப்பித்து வரும் நிலையில் கல்லூரிகள் தொடங்கிய ஒரு மாதத்தில் அந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.