தமிழகத்தில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அப்போது பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பின் பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 13,990 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,14,276ஆகவும் 2,547 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,14,643 ஆகவும், 11 பேர் இறந்ததால் 36,886 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது 62,767 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல கூடுதல் ஆம்புலன்சு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.