தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாநிலத்திற்கென மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாநில கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆகியவர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து மாநில கல்வி கொள்கை வகுப்பு உயர்மட்ட குழு ஒன்று அரசு அமைத்துள்ளது. அந்த குழு அனைவருடனும் கருத்து மற்றும் ஆலோசனை கேட்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மாணவர்களிடையே இடைநீச்சல் அதிகரிக்க கூடும். அதனால் இதுவரை 10, 12 வகுப்பு பொது தேர்வு மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தற்போது தேசிய கல்வி கொள்கையை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய கல்வி அமைச்சரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் மாநில கல்வி கொள்கை வகுக்கப்படும். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.