Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. முழு விவரம் இதோ… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

வேலைவாய்ப்பு முகாமானது 10-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை கும்பகோணம் அருகில் (திருமங்கலக்குடி) உள்ள AS SALAM பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்வதோடு இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு 04362237037 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளவும்.

இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்: AS SALAM பொறியியல் கல்லூரி, திருமங்கலக்குடி, கும்பகோணம் அருகில், தஞ்சாவூர்-612102.. Landmark: https://www.google.com/maps/place/As-Salam+College+of+Engineering+&+Technology/@11.0336759,79.4697581,14z/data=!4m5!3m4!1s0x0:0x81b4a20933

Categories

Tech |