Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்…. இளைஞர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

இதில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர் வரை அனைவரும் பங்கேற்கலாம். இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |