தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 1-ஆம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறும்.
இதற்காக மார்ச் 1-ஆம் தேதி அன்று அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.