Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழக அரசுப் பணியாளர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் பணிக்கு ஏற்றவாறு மாதந்தோறும் ஊர்திப்படி என்று தனியாக தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி ஊழியர்களின் தனிப்பட்ட விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை பொறுத்து ஊர்தி படியில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், பள்ளிகளில் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, முழு ஆண்டு தேர்வு மற்றும் ஏனைய அரசு விடுமுறை நாட்களுக்கு ஊர்தி படியில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படாத நிலையில் சில பள்ளிகளில் பார்வைத்திறன் குறைபாடு, கைகால் எங்க குறைபாடு ஆகிய சில குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மூர்தி படியில் பிடித்தம் செய்யப்படுகிறது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், தற்செயல் விடுப்பை தவிர பிற விடுமுறை நாட்களில் பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்கள் பணிக்காலமாக கருதப்படுவதால் பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயந்திர குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு ஊதியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |