Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துகளில் இனி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிகளில் இலவச கல்வி மற்றும் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. குறிப்பாக மாற்று திறனாளி மாணவர்களுக்கு இந்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கின்றன. மேலும் அவர்களுக்கு உயர் கல்வியில் சேர்வதற்கு 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கிடைக்கும் வகையில் இட ஒதுக்கீடு உள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளும் அவர்களின் உதவியாளர்களும் தேசிய அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக அல்லது சலுகையுடன் பயணிப்பதற்கு நடத்துனர்கள் அனுமதிக்கவில்லை என்று மனு அளிக்கப்பட்டது. தற்போது அது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் மாநகர பேருந்து கழகம் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும்போது நடத்துநரிடம் தங்களின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டை வழங்கி இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இதனை அனைத்து நடத்துனர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |