தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வபோது வழங்கி வருகின்றது. அதேசமயம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. அவ்வகையில் தற்போது தமிழக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஏறும் இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. மீதி 25 சதவீதம் கட்டணம் மட்டுமே அவர்கள் செலுத்தினால் போதும். மேலும் மாற்றுத்திறனாளிகள் ஏறி பயணிக்க வசதியாக புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.