Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டம் டூ மாவட்டம் செல்லும் பேருந்துகளுக்கு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் தொற்றால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்பதால் பேருந்து சேவைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் முதல்வர் முக.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சிறிது காலம் முற்றிலும் பேருந்து சேவை நிறுத்துவது குறித்தும், தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |