தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே அமலில் இருக்கும் சில கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், இன்னும் சில தினங்களில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் மக்கள் கூட்டம் கூடும் கடைகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது. மேலும் நீண்ட தூர பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் அமல்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.