சென்னையில் ஜெயலலிதா நினைவிடதிறப்பு விழாவிற்காக அதிமுக தொண்டர்கள் 1500 பேரை மதுரையிலிருந்து அமைச்சர் செல்லூர் ராஜு அழைத்து வந்துள்ளார்.
சென்னையில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிட கட்டிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணி 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தற்போது நினைவிட பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. பொதுமக்கள் அனைவரும் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை திறந்து வைக்கிறார். அந்த விழாவிற்காக மதுரையில் இருந்து அதிமுக தொண்டர்கள் 1500 பேரை தனி ரயில் மூலம் சென்னைக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அழைத்து வந்துள்ளார்.