Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மிகவும் தீவிரம்… இனி இயல்பு வாழ்க்கை முடங்கும்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டிருப்பதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது.

அதனால் மூன்று மாவட்டங்களில் மிக கன மழையும், 15 மாவட்டங்களில் கன மழையும் பெய்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கன மழையும், விழுப்புரம், தஞ்சை, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், மதுரை, இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்யும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |