Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மிகவும் தீவிரம்… முன்னேற்பாடுகள் தயார்… அமைச்சர் உதயகுமார்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

சென்னையின் தண்ணீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 36 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்குவதற்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை இயல்பு நிலையை விட 40 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. தொடர் மழையால் ஏரியல் அனைத்தும் விரும்பினால் உபரி நீரை வெளியேற்றுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |