Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை நீலகிரி,கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக் கூடும் என்பதால் மக்கள் மலை ஏற்றத்தை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |