இஸ்ரோ நிறுவனம் இந்திய செயற்கை கோள்களைகளையும், பிற நாடுகள் தயாரிக்கும் செயற்கை கோள்களையும் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் (ஆந்திரா) உள்ள ஏவுதளங்களில் இருந்து விண்ணுக்கு செலுத்தி வருகிறது. அங்கு இரு ஏவுதளங்கள் உள்ளன.அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் எதிர்கால தேவை, செலவீனம், பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு மற்றொரு ஏவுதளம் அவசியம் என அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட மத்திய அரசும் தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றார்.