தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 26) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மார்ச் 27ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், மார்ச் 28ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories