Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மினி விளையாட்டு அரங்கம்…. அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் ஆணையிட்டுள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அபூர்வா, உறுப்பினர் ஆனந்தகுமார் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது, மாவட்ட விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்த வேண்டும். மேலும் விளையாட்டு வீரர், வீராங்கனை அலுவலர்கள், பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதையடுத்து தமிழக வீரர்கள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், வெற்றி பெறும் தேவையான வசதிகளையும், பயிற்சிகளையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

நம் பிள்ளைகள் என்ற உணர்வுடன் விளையாட்டு வீரர்களின் சாதனைகள், கனவை நனவாக்க அதிகாரிகளும், பயிற்சியாளர்களும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இவற்றிற்காக 226 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. மேலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களும், இளைஞர்களும் முறையான பயிற்சி பெற அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மினி விளையாட்டரங்கம் கட்ட வேண்டும். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். தொடர்ந்து சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகடமி அமைக்கும் பணிகளை விரைவாக செய்ய வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

Categories

Tech |