Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த…. காலஅவகாசம் நீட்டிப்பு – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள. இதையடுத்து முழு ஊரடங்கு காலகட்டத்தில் மின்கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த அவகாசம் அளிக்குமாறு நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து மின் வாரியம் சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாழ்வழுத்த நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான கடைசி நாள் கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை இருக்கலாம். மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையவழி வாயிலாகவும், மற்றும் கைபேசி வாயிலாக பணம் செலுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |