Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதில் சிக்கல்…. புதிய பரபரப்பு…..!!!!!!

மின்வாரியம் இணையதளம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் சமயம் அதிகமான நேரம் செலவாகுவதால் நுகர்வோர் சிரத்திற்கு ஆளாகின்றனர். தமிழநாடு மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை கட்டண மையங்கள் மட்டுமல்லாது அதன் இணையதளம், மொபைல் செயலி உள்ளிட்ட டிஜிட்டல் முறையிலும் செலுத்தலாம். அந்த வகையில் www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கட்டணம் செலுத்தும்போது, அதற்கான இணைப்பில் அதிக நேரமாவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியிருப்பதாவது, “மின்வாரிய இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்தும் பக்கத்தில் யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு செலுத்தி உள்ளே சென்று கட்டணம் கிளிக் செய்யும் வரை இணையதளம் வேலை செய்கிறது. ஆனால் அதற்கு பிறகு பணம் செலுத்துவதற்கான சேவை கிடைப்பதில்லை. பல்வேறு முறை முயற்சி செய்தும் இதே சூழல் ஏற்படுகிறது. இப்பிரச்னை தொடர்ந்து இருப்பதால் விரைந்து மின்கட்டணம் செலுத்தும் அடிப்படையில் இணையதளம் சர்வர் திறனை மேம்படுத்தவேண்டும் என்று அவர்கள் கூறினர்.

Categories

Tech |