கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடியாக அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க தமிழகத்தின் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்தது. மேலும் இது குறித்து மத்திய அரசு தமிழக அரசுக்கு பல முறை கடிதம் எழுதியது. இதனையடுத்து தமிழக மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டது. மேலும் இந்த மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியமானது ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் கோரியது.
இந்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு, ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்கவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.