Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்சார பேருந்துகள் திட்டம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெற்றது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்தனர். இதையடுத்து தற்போது போக்குவரத்துத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர்.

இதில் எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் பேருந்து போக்குவரத்தினை மேம்படுத்திட KFW (ஜெர்மன் மேம்பா்டு வங்கி) நிதியுதவியுடன் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டம் உள்ளதாக சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |