Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்வோருக்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 6 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று (பிப்.22) சென்னை சென்ட்ரல்- விஜயவாடா வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகளில், மின்சார கம்பி பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்நிலையில் விஜயவாடா – சென்னை சென்ட்ரல் இயக்கப்படும் விரைவு ரயில் இன்று கூடூர் – சென்னை சென்ட்ரல் இடையேயும், சென்னை சென்ட்ரல் – விஜயவாடா இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் (12712), சென்னை சென்ட்ரல் முதல் கூடூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 4:25 மணிக்கு மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் ரயில், மற்றும் காலை 4:25 மணிக்கு ஆவடி – மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் ரயில், நெல்லூர் – சூலூர்பேட்டை இடையே காலை 10:15 மணிக்கு புறப்படும் ரயில், சூலூர்பேட்டை – நெல்லூர் இடையே காலை 7:45 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலூர்பேட்டை- சென்னை மூர்மார்க்கெட் இடையே 12:35 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட் – ஆவடி இடையே இரவு 9:15 மணிக்கு இயக்கப்படும் 6 ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |