தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் பின்வரும் நாட்களில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கீழுள்ள பல்வேறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதால் பின்வரும் நாட்களில் மின் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார பராமரிப்பு பணி காரணமாக, மன்னடி மற்றும் மணலி பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மண்ணடி தெருவில் ஆர்மேனியன் தெரு, செப்பு தாஸ் தெரு, நைனியப்ப தெரு, அங்கப்பன் நாயக்கன் தெரு, மூன்றாவது மற்றும் நான்காவது கடற்கரை சாலை, பிரகாசம் சாலை, தம்பு செட்டி, சுங்க வரித்துறை மற்றும் அருகில் உள்ள பகுதிகள்.
அதேபோல மணலி பகுதியில் எம்எம்டிஏ பேஸ் 1&2 எலந்தனூர், சடையங்குப்பம் 200 அடி சாலை, ராஜீவ்காந்தி நகர், வைக்காடு கிராமம், சாந்தங்காடு ஸ்டீல் யார்டு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. கரூர் மாவட்டம் தாளப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கரூர் மதுரை தேசிய நெடுங்சாலையில் உள்ள கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையாம்பரப்பு, கூலிநாய்கனூர், கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம் தாதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் இயக்கம் இருக்காது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் மற்றும் தெங்கம்புதூர் ஆகிய மின் வினியோக பிரிவுக்குட்பட்ட உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதால். நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை வடிவீஸ்வரம், கோட்டாறு, கணேசபுரம், இடலாக்குடி , ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, ராமன்புதூர் சந்திப்பு, இந்துக்கல்லூரி, வேத நகர், தெங்கம்புதூர், மேல மணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டி பொட்டல், காட்டுவிளை, புதூர் , ஈத்தாமொழி, தர்மபுரம், பொட்டல், வெள்ளாளன்விளை .மேலகிருஷ்ணன்புதூர், புத்தன் துறை, ராஜக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இதேபோன்று கன்னியாகுமரி மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது . எனவே நாளை காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர் , மயிலாடி, கீழமணக்குடி, அழகப்பபுரம் ,சுசீந்திரம், கொட்டாரம், சுவாமிதோப்பு, அஞ்சுகிராமம், வாரியூர் போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.