Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் அபாயம்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுவப்பட்டு நீண்டகாலம் ஆவதால், அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திடீரென 2 மின்உற்பத்தி எந்திரங்கள் திடீரென பழுதடைந்து உள்ளது.
அதன்படி 1-வது மின்உற்பத்தி எந்திரம், 5-வது மின் உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலனில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனல்மின்நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் பழுது நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |