Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்விபத்தால் 97 பேர் உயிரிழப்பு…. மின்வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழக மின்வாரியம் டிரான்ஸ்ஃபார்ம், கேபிள்,மின்கம்பம் போன்ற சாதனங்கள் உதவியுடன் மின்விநியோகம் செய்து வருகிறது. அந்த சாதனங்களில் எப்போதும் மின்சாரம் சென்று கொண்டிருப்பதால் மின் ஊழியர்களை தவிர வேறு யாரும் அதனை தொட அனுமதி கிடையாது. மின்வாரியத்தில் 50,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதால் பணி சுமை ஏற்படும் மன அழுத்தத்தால் ஊழியர்கள் சிலர் மின்விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அவ்வகையில் நடைபாண்டில் ஜனவரி மாதம் முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மட்டும் மின்விபத்தில் சிக்கி ஊழியர்கள் மற்றும் மக்கள் என மொத்தம் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தவிர மாடுகள் உட்பட 28 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இதை எடுத்து ஊழியர்களுக்கு மாதம் ஒருமுறை பாதுகாப்பு தொடர்பான வகுப்புகள் எடுக்கப்படும். ஊழியர்களுக்கு காலணிகள்,தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்குவது உறுதி செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் மக்கள் யாரும் அருந்து கிடக்கும் மின் கம்பியை தொடக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |