Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்வெட்டு செயற்கையாக நடக்கிறது…. அண்ணாமலை குற்றசாட்டு…!!!!!

தமிழகத்தில் மின்வெட்டு செயற்கையாக வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின் தடை உள்ளது. ஆனால் மின்துறை அமைச்சரும், முதலமைச்சரும் கைகாட்டுவது மத்திய அரசைத்தான். செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்க முயல்கிறார்கள். அமைச்சர்கள் பணம் சம்பாதிக்க செயற்கையான மின் தட்டுபாட்டை உருவாக்கிறார்கள்.

ஆனால், மத்திய அரசை எதற்காக குறை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. போதிய அளவில் நிலக்கிரி கையிருப்பு உள்ளது, மற்ற மாநிலங்களில் இதுபோன்ற மின்வெட்டு கிடையாது” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

Categories

Tech |