Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு?…. அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்….!!!!

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட தொடங்கியுள்ளது. ஏற்கனவே மக்கள் கோடை வெயிலால் தவித்து வரும் நிலையில் மின்வெட்டு பிரச்சனை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் மின்வெட்டு பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “மின்சாரம் மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்காததால் மின்தடை ஏற்படுகிறது. ஒரு நாள் மின் உற்பத்திக்கு தமிழகத்திற்கு சுமார் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.

ஆனால் கடைசியாக நாள் ஒன்றுக்கு ஒன்றிய அரசு 32,000 டன் நிலக்கரி மட்டுமே வழங்கியது. இந்த மின் பற்றாக்குறையை சரிசெய்ய 3000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு தேவையான நிலக்கரி இல்லாத போதும் தொழிற்சாலைகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |