மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து இருக்கிறது. வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார்எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மின் வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடந்து வருகிறது. மக்களின் சந்தேகதுக்கு விளக்கமாக மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது என மின்வாரியமானது தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் வாயிலாகவும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அந்த வகையில் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை எப்படி இணைக்கலாம்?, யாரெல்லாம் இணைக்க வேண்டும் எனபது குறித்த விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
# முதலாவதாக TNEB-ன் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான https://nsc.tnebltd.gov.in/adharupload-ஐ பார்வையிட வேண்டும்.
# அங்கு ஆதார் இணைப்புக்குரிய படிவம் இருக்கும். அவற்றில் உங்களது TANGEDCO சேவை இணைப்பு எண்ணை உள்ளிடவும்.
# அதன்பின் OTP-ஐ உருவாக்குவதன் வாயிலாக உங்களது மொபைல் எண்ணை உறுதிப்படுத்தவும்.
# OTP-ஐ உள்ளிட்ட பின் TANGEDCO கணக்கை சரிபார்க்கவேண்டும்.
# பிறகு குடியிருப்போர் விபரங்களை உள்ளிட வேண்டும்.
# TANGEDCO கணக்கு உடன் இணைக்கவேண்டிய தங்களது ஆதார்அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.
#அடுத்ததாக ஆதாரில் உங்களது பெயரை உள்ளிட்டு, பின் ஆதார் ஐடியைப் பதிவேற்றவும்
# கடைசியில் படிவத்தைச் சமர்ப்பித்து ஒப்புகை ரசீதை பதிவிறக்க வேண்டும்.
இவ்வாறு ஆதார் எண்ணை இணைப்பதற்கு நுகர்வோரிடம் பணம் வாங்கினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள், மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.