தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாத வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாமல் சிலர் அலட்சியமாக உள்ளனர். பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகுதான் மின்கட்டணம் செலுத்துகிறார்கள். அதனால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு நேராகச் சென்று மின் இணைப்பை துண்டிக்கவும், அபராதம் வசூலிக்கவும் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் பலர் தாமாக முன்வந்து மின் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள். தாம்பரத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 75 லட்சத்திற்கு மேல் உள்ள நிலுவை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.