தமிழகத்தில் மின்வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கி வருகிறது. மேலும் விசைத்தறி மற்றும் கைத்தறி சங்கங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கு ஏற்ப செலவு தொகையை மின்வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் மானியமாக வழங்குகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
இதனிடையே கடந்த மாதம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் இலவசம் மற்றும் மானிய மின்சாரத்திற்கு அரசு வழங்கும் மானிய செலவினமும் அதிகரித்துள்ளது. இதனால் அரசுக்கு 3000 கோடி செலவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.