Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மின்கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதங்களில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |