தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் முதல்வர் உத்தரவுப்படி நீடிக்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி மே 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்கான மின் கட்டணம் ஜூலையில் முறை படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் விவரம் அறிய தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் இணைய தளத்தை அணுகவும்.