தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் மின் ஊழியர்கள் மே மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு நேரில் செல்ல தவிக்கின்றனர்.
எனவே நுகர்வோர் தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் மின் வாரியத்திற்கு அனுப்பினால் அவர்கள் பயன்பாட்டை கணக்கீடு செய்து அதற்குரிய கட்டணத்தை தெரிவிப்பார்கள். இது தொடர்பான விளக்கத்தை www. tangedco.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.