Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு…. அரசின் அறிவிப்புக்கு பா.ம.க நிறுவனர் கடும் கண்டனம்….!!!

மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு அலகிற்கு 27.50 பைசா முதல்‌ 1.25 ரூபாய் வரை உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை மின்கட்டணம் உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மின்சார கட்டணங்களும் தற்போது உயர்த்தப்பட்டால் மக்கள் மேன்மேலும் பாதிக்கப்படுவார்கள்.

இதனையடுத்து தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டணங்கள் குறித்த தெளிவான அறிக்கையை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள நிலையில், பல கட்ட கலந்தாய்வுக்கு பிறகு செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு மின் கட்டண உயர்வால், இலவச மின்சாரம் பெறுபவர்கள் தவிர அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். இதை தொடர்ந்து 2 மின்சாரங்களை பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 27.50 காசுகளும், 500 அலகு மின்சாரம் பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 1.19 ரூபாயும், 900 அலகு பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 1.25 ரூபாயும் செலுத்த வேண்டும்.

இந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது தமிழக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை எனவும் கூறப்படுகிறது. இந்த மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசு கூறியுள்ள காரண          ங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக மின்வாரிய துறையில் இருக்கும் 1,59,823 கோடி கடனுக்கு 16,511 கோடி ரூபாய் வட்டியாக செலுத்துகிறது. இந்த அளவுக்கு கடன் பிரச்சினை இருப்பதற்கு காரணம் தமிழக மக்கள் கிடையாது எனவும், நிர்வாக துறையில் உள்ள சீர்கேடு காரணம் எனவும் கூறய ராமதாஸ் மின்சார கட்டண உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |