தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 – 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 என 2 மாதங்களுக்கு சேர்த்து 355 ரூபாயும், 201 – 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து ரூ.145 ரூபாயும், 301- 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து 295 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 0-50 கிலோ வாட் வரை மின் பளு கொண்ட தாழ்வழுத்த ஆலைகளுக்கு மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ வாட் 100-ல் இருந்து 75 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 100 முதல் 112 கிலோ வாட் வரை மின் பளு கொண்ட தாழ் வழுத்த ஆலைகளுக்கு மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ வாட் 700 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும் உயர் அழுத்த மின் நுகர்வோர்களுக்கான நிலையான கட்டணங்கள் மாதம் ஒன்று இருக்கு ஒரு கேவி ஏக்கு 600 ரூபாயிலிருந்து 550 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.