Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு….. உடனடி அமல் கிடையாது….. அமைச்சர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்குரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் 12,646 கோடியாக கடன் உயர்ந்துள்ளது.வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டண முறை நாளை முதல் அமல் இல்லை என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மின்கட்டண உயர்வு உயர்வு குறித்து விளக்கம் அளித்த அவர் வெளிநாட்டு நிலக்கரியின் கட்டணம் உயர்வால் மின்சார துறையில் கடன் அதிகரித்துள்ளது. இதனால் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு மூலம் 18 முறை அழுத்தம் வந்தது. மின்கட்டணத்தை உயர்த்தவிட்டால் மானியம் தரமாட்டோம் என்று மத்திய அரசு கூறுவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |