Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு…. மக்கள் என்ன நினைக்கிறார்கள்….? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு அலகிற்கு 27.50 பைசா முதல்‌ 1.25 ரூபாய் வரை உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை மின்கட்டணம் உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மின்சார கட்டணங்களும் தற்போது உயர்த்தப்பட்டால் மக்கள் மேன்மேலும் பாதிக்கப்படுவார்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் உயர்த்தப்படும் மின் கட்டணங்கள் குறித்த தெளிவான அறிக்கையை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள நிலையில், பல கட்ட கலந்தாய்வுக்கு பிறகு செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு மின் கட்டண உயர்வால், இலவச மின்சாரம் பெறுபவர்கள் தவிர அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். இதை தொடர்ந்து 2 மின்சாரங்களை பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 27.50 காசுகளும், 500 அலகு மின்சாரம் பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 1.19 ரூபாயும், 900 அலகு பயன்படுத்துபவர்கள் கூடுதலாக 1.25 ரூபாயும் செலுத்த வேண்டும்.

இந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது தமிழக வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை எனவும் கூறப்படுகிறது. இந்த மின்கட்டண உயர்வுக்கு தமிழக மின்வாரிய துறையில் இருக்கும் 1,59,823 கோடி கடனுக்கு 16,511 கோடி ரூபாய் வட்டியாக செலுத்தபடுவதுதான். இந்த மின் கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளதால் அரசு மக்களின் கருத்துக்கணிப்புகளை கேட்பதற்கு முடிவு செய்துள்ளது.

அதன்படி மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக்களை மக்கள் இணையதளத்தில் தெரிவிக்கலாம். தமிழக அரசு தற்போது மக்களை நேரில் அனைத்தும் மின் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் வருகிற 22-ஆம் தேதியும், கோயம்புத்தூரில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரியில் வருகிற 16-ஆம் தேதியும், மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள லட்சுமி சுந்தரம் அருகில் வருகிற 18-ஆம் தேதியும் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த அறிவிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |