தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத்தில் இழப்பை சரிசெய்ய ஆய்வு செய்த சீர்திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் கணக்கீடு செய்யும் முறை டிஜிட்டல் மீட்டரில் இருந்து ஸ்மார்ட் மீட்டர் முறைக்கு மாற்றப்படும். கடந்த ஆட்சியில் 9 மாதங்கள் செய்யப்படாமல் இருந்த பராமரிப்பு பணிகள் கடந்த 10 நாட்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.