தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் ஊரடங்கும் முடியும் வரை மின்தடை ஏற்படாது என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது கடந்த ஒரு சில நாட்களாக மீண்டும் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 4000 மெகா வாட் வரை காற்றாலை மின்சாரம் கிடைக்கும்போது மின்தடை ஏற்பட காரணம் என்ன என முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார். 10 நாளில் மின் தடை சரிசெய்யப்படும் என்று கூறும் அமைச்சர் மே 7 ஆம் தேதியிலிருந்து என்ன செய்து கொண்டிருந்தார்? சென்னையில் புதைவட மூலம் மின் வினியோகம் செய்யப்படும் நிலையில் மின் தடை ஏற்பட காரணம் என்ன என கேட்டுள்ளார்.
Categories