Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் மீட்டருக்கு மாத வாடகையா……? புதிய அதிர்ச்சி தகவல்….!!!!

வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மீட்டருக்கும் மாத வாடகை வசூலிக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மின் கட்டண உயர்வு அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மின் மீட்டருக்கு மாத வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மின் பயன்பாட்டை அளவிட பயன்படும் மின் மீட்டருக்கு மாதந்தோறும் ரூபாய் 60 என மின்கட்டணம் செலுத்தும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரூ.120 மின் மீட்டருக்கு வாடகையாக செலுத்தும் அபாயம் நேரிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இதற்கு தமிழ்நாடு அரசு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து விட்டால் இனி மின் பயன்பாட்டாளர்கள் செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை 120 ரூபாயை மின் மீட்டர்க்கான வாடையாக செலுத்தும் அபாயம் நேரிடலாம்.

இந்த கட்டணம் டிஜிட்டல் மீட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மாத வாடகையில் இருந்து தப்பிக்க முடியுமா என்று கேள்விக்கு மின்துறை அதிகாரிகள் கூறுகையில், வாடிக்கையாளர்கள் மாத வாடகை செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்கு மின்மீட்டரை விலை கொடுத்து வாங்கிக் கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |