தமிழகத்தில் மீண்டும் அம்மா குடிநீர் திட்டம் அமல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள சேத்துப்பட்டில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய LIC பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் நல சங்கம் சார்பில், தேசிய அளவிலான 9 வது சமூக நீதி மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளார்.
இதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், அகில இந்திய சமூக நீதி மாநாட்டில் திமுக சார்பில் கலந்துகொண்டேன் எனவும் சமூக நீதியை காக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும். இந்நிலையில் தமிழகத்தில் நிழற்கூடை இல்லாத போது, பேருந்து நிறுத்தங்களில் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து நிழற்கூடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சி காலத்திலயே அம்மா குடிநீர் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு பயன் தரும் என்பதால் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.