தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு அது குறித்த ஆலோசனை கூட்டம்தலைமை செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதில் உலக அளவிலும், இந்திய அளவிலும் தற்போது தொற்றின் நிலை குறித்து விவாதிக்கபட்டிருந்தது. உயிரிழப்புகளை தடுப்பதற்கு தடுப்பூசி அடிப்படை என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட வாரியாக தடுப்பூசி போட தகுதியானவர்களின் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டு தெரிந்து கொண்டார்.
மேலும் நோய்களை கண்டறிந்தல், நோய்க்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் போன்ற கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது வரையில் முதல் தடுப்பூசி போடாத சுமார் 50 லட்சம் நபர்கள் மற்றும் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய 1.32 கோடி நபர்களை கண்டறிந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்தில் ஒருங்கிணைந்து அப்பகுதிகளில் வாரந்தோறும் சனிக்கிழமை நடத்தக்கூடிய தடுப்பூசி முகாம்களில் முழுமையாக பயன்படுத்தி தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் மாவட்ட அளவில் முழுமையாக 100 புதிய தடுப்பூசி செலுத்திய உள்ள அமைப்புகளை கண்டறிந்து அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கவுரவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே அளித்துள்ள வழிமுறைகளின் படி மாதிரிகள், மரபியல் சோதனைகளில் தற்போதைய கண்காணிப்பு தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மேலும் சுகாதார வல்லுனர்கள் கைகளை கழுவுதல் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.