Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் – அரசு பரபரப்பு உத்தரவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத் தாண்டவமாடி வந்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. மேலும் மக்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தனர். இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள்  அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500 வரை பரவி வருகிறது. இதனால் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா அதிகம் பாதிக்கும் மாவட்டங்களை கண்காணித்து கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |